தமிழ்நாடு

tamil nadu

கரோனா நிவாரணத்திற்காக தாலியை விற்ற பெண்!

By

Published : Apr 24, 2020, 1:35 PM IST

மும்பை: மகாரஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தாலியை விற்று ஐந்தாயிரம் ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளார்.

கரோனா நிவாரண்திற்காக தாலியை விற்ற பெண்
கரோனா நிவாரண்திற்காக தாலியை விற்ற பெண்

மகாராஷ்டிரா வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதா லாண்டே. இவர் தையல் தொழில் செய்துவருகிறார். கரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவரது தொழில் மிகவும் முடங்கியுள்ளது.

இருந்தபோதிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிவாரண உதவிக்காக நீதா லாண்டே தனது தாலியை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதையடுத்து அந்தப் பணத்தை அப்பகுதி தாசில்தாரிடம் கொடுத்து மத்திய அரசின் நிவாரண உதவிக்காக இந்த பணத்தை அனுப்பிவையுங்கள் எனது தாலியை விற்று கொண்டுவந்த பணம் எனக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த தாசில்தார், இந்த இக்கட்டான சூழலிலும் மக்களுக்காக நன்மை செய்ய வேண்டும் என்று முன்வந்ததை பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ‘கைவினைப்பொருள் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’- பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details