தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நவீன யுகத்தின் புத்தரா "மார்க்ஸ்"? - நவீன யுகத்தின் புத்தரா

உலகம் முழுவதும் முதலாளித்துவம், அரசியல் ரீதியாக பரவி விரிவடைந்துள்ளது. ஆனாலும் இன்று வரை முதலாளித்துவத்தை நடுங்கவைக்கும் மார்க்ஸியம் எனும் சித்தாந்தம் சமகாலத்தில் ஏன் தேவைபடுகிறது என்பது குறித்த சிறிய தொகுப்பை பார்ப்போம்.

கார்ல் மார்க்ஸ்

By

Published : May 5, 2019, 8:22 PM IST

உலக அரசியலில் இன்று வரை ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் ஒரு தத்துவம் என்றால் அது மார்க்ஸியம்தான். தற்போது, முதலாளித்துவ தேசியவாதம் அனைத்து நாடுகளையும் கைபற்றிய நிலையில், மார்க்ஸியத்தை முன்வைக்கும் நாடுகள் இல்லாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் மக்கள் வர்க்கமாய் ஒன்றுச் சேராமல் தங்களின் தனித்த அடையாளங்களை முன்னிறுத்தி சேர்ந்துக்கொள்கின்றனர். மதம், இனம், மொழி போன்றவற்றின் மூலமே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மக்கள் விரும்புகின்றனர் என்பதை உலகம் முழுவதும் மக்கள் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகள் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மார்க்ஸியமும் புத்த மதமும்

பாட்டாளிகள் ஒன்றுச் சேர்ந்தால் மட்டுமே வர்க்க வேறுபாடுகள் ஒழியும் என அன்றே மார்க்ஸ் சொன்ன தத்துவம் இன்றளவும் அனைவருக்கும் தேவைபடுகிற ஒரு கோட்பாடாகவே பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டில் மானுடத்திற்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கக் கூடிய வகுப்புவாதம் மக்களின் கனவுகளை கலைத்து அவர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடுகிறது. புற்றுநோயை சரி செய்ய வேண்டுமானால் அதன் மூலப்பகுதியை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதுபோலதான் வகுப்புவாதத்தினை மதத்தின் அடிப்படையாக மார்க்ஸ் கருதி மதத்தினை போதை என குறிப்பிட்டார்.

வகுப்புவாதத்தின் கோர முகத்தை பாலஸ்தீனம், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்து வருகிற தாக்குதல் சம்பவங்களில் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 2016 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகில் பத்தில் ஒரு குழந்தை தொழிலாளியாக உள்ளது எனக் குறிப்பிடுகிறது. 1848 ஆம் ஆண்டு அவரும் எங்கல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் பத்து அம்சங்களில் ஒன்றானது குழந்தை தொழிலாளிகளை ஒழிப்பதும், பொதுபள்ளிகளில் இலவச கல்வியினை கற்பிப்பதும் ஆகும்.

மார்க்ஸ் எனும் சித்தாந்தம்

தொழிலாளர்கள் அனைவரும் இன்று எட்டு மணி நேர பணியுடன் தங்களின் வாழ்வினை நடத்தி வருவதற்கு காரணம் அவர் காலத்தில் அவரும், அவரை தொடர்ந்து அவரின் கொள்கை வாரிசுகளான லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் ஆவர். நிலையற்ற முதலாளித்துவ அமைப்பில் வேலைவாய்ப்பின்மை என்பது இன்றியமையாதது, நெருக்கடியான காலநிலையில் பெருந்திரளாக மக்கள் வேலையை இழக்கும் போது குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய அவர்களை பெரு முதலாளிகள் திணிப்பர் எனும் வேலைவாய்ப்பின்மையின் விளக்கத்தை 1840களில் மிகச் சரியாக கணித்தவர் கார்ல் மார்க்ஸ் எனும் தீர்க்கதரிசி ஆவார்.

கார்ல் மார்க்ஸ் சொன்ன புரட்சி 19ஆம் நூற்றாண்டில் வன்முறையின் மூலம் நிகழ்ந்ததால் அதனை முழுவதுமாக ஏற்றக்கொள்ள இயலாதவையாக கருதப்பட்டது. ஆனால், அவர் சொன்ன கருத்துகளில் வன்முறையை தவிர்த்து பார்த்தால் புத்தரின் கருத்துகளுக்கும் மார்க்ஸியத்துக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்வர்.

ABOUT THE AUTHOR

...view details