தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரையும் விட்டுவிடக் கூடாது... களமிறங்கிய முக்கிய காங். தலைவர்கள் - காங்கிரஸ்

பாட்னா: மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

By

Published : Nov 9, 2020, 5:58 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று நவம்பர் 7ஆம் தேதி முடிவுற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மெகா கூட்டணி களம் கண்டுள்ளது.

இச்சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பிகாரில் இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என்று கூறியுள்ளன. இதனால் இரு கூட்டணிகளுக்கும் ஆட்சி அமைக்க சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், அதைவிட முக்கியப் பிரச்னையாக தங்களது கூட்டணிகளின் எம்எல்ஏக்களை பாதுகாப்பதில்தான் இரு அணிகளும் கவனம் செலுத்திவருகின்றன. குறிப்பாக இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் அதீத விழிப்புணர்வுடன் செயல்பட்டுவருகிறது. கடந்த காலங்களில் மத்தியப் பிரதேசத்திலும் மணிப்பூரிலும் ஆட்சியைப் பறிகொடுத்தது போல் இருந்துவிடக் கூடாது என்பதே அக்கட்சி மிக மிகக் கவனத்துடன் செயலாற்றிவருகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வெற்றிபெறும் காங்கிரஸ் வேட்பாளர்களைப் பாதுகாக்கவும், அதற்கான அதிரடி வியூகங்களை வகுக்கவும் இரு முக்கியத் தலைவர்களை அக்கட்சித் தலைமை பிகாரில் களமிறக்கியுள்ளது. அதன்படி ரன்தீப் சிங் சுர்ஜ்வாலாவும் அவினாஷ் பாண்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் நடைபெற்ற குதிரை பேரம் பிகாரிலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோவா, மணிப்பூரில் கோட்டை விட்டது போன்று பிகாரில் ஆட்சியை கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகத் தெளிவாக காங்கிரஸ் காய் நகர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிகார் தேர்தல்: குற்ற வழக்கில் தொடர்புடைய 1,100 பேர் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details