தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம் ஆத்மி கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ள காங்கிரஸ் - Congress and AAP in delhi

ஹரியானாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி டெல்லி காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகமும், ஆம் ஆத்மிக்கு எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது.

Arvind kejariwal

By

Published : Oct 29, 2019, 5:00 PM IST

அன்மையில் வெளிவந்த சட்டபேரவை தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் முக்கிய திருப்பங்களை உருவாக்கியுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸின் மறுமலர்ச்சி, டெல்லியில் உள்ள கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த மாற்றம் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு திகைப்பளித்திருக்கிறது.

காங்கிரசின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக மோசமடையவே, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அதன் ஆதாயத்தை பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தனது கணக்கைத் திறக்கத் தவறியதால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மிகவும் எச்சரிக்கையுடன் தற்போது நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்குப்பின் டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அணுகுமுறையில் திருத்தம் செய்து வருகிறார். கடந்த காலங்களைப் போல் கெஜ்ரிவால், அன்மையில் ஒருமுறை கூட பிரதமர் மோடியைத் தாக்கி பேசவில்லை.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜிரிவால்

டெல்லி மக்கள் பலரிடம் உள்ள அடிப்படை தேவைகளை அவர்களின் உணர்வுகளை அறிந்துகொள்கிறார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தனது செல்வாக்கினை மீண்டும் உயர்த்த முயற்சித்து வருகிறது. 200 யூனிட் வரை மின்சாரம் வசூலிக்காதது, தண்ணீர் கட்டணங்களை குறைத்தல், குறைந்த விலை மருத்துவ சேவை மற்றும் பல மக்கள் சார்பு நடவடிக்கைகள் ஆம் ஆத்மி செல்வாக்கை உயர்த்துவதில் பங்கு வகிக்கின்றன.

இருப்பினும் தனது யுக்தியை ஆம் ஆத்மி முழுமையாக தற்போது உருவாக்க முடிவில்லை. பாஜக தனது பாரம்பரிய ஆதரவு தளத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதால், ஆம் ஆத்மி கட்சி எப்போதும் டெல்லியில் முக்கியமாக காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளிலேயே ஆதாயம் பெற்றுள்ளது என்பதே உண்மை. முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மரணத்திற்குப் பிறகு, காங்கிரசின் டெல்லி பிரிவு வலுவிழந்துள்ளது. ஷீலா தீட்சித்தின் மரணம் மற்றும் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஆகிய நடவடிக்கைகள் டெல்லிவாசிகளை காங்கிரஸிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சியை நோக்கி ஈர்க்கத் தொடங்கின.

ஆய்வு மேற்கொள்ளும் கேஜிரிவால்

எனினும், அருகிலுள்ள ஹரியானாவில் காங்கிரஸின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி துவண்டிருந்த காங்கிரசுக்கு சாதகமான செய்தியை அனுப்பியுள்ளது. பாஜகவின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆழ்ந்த சந்தேகம் கொண்ட ஏழை மக்கள், டெல்லியில் உள்ள பாஜக அரசு அவர்களை உத்தர பிரதேசம் பீகாரில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பும் என்று அஞ்சுகிறார்கள் . சிறுபான்மையினர், பாஜகவை அதன் இந்துத்துவா கொள்கையால் விரும்பவில்லை. இவ்வாறு, ஹரியானாவில் காங்கிரஸின் மறுமலர்ச்சி - டெல்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் ஆம் ஆத்மிக்கு எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கிறது.

இதையும் பருங்க: சாட்டையடி வாங்கிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details