ஹைதராபாத் (தெலங்கானா): வரம்பு மீறிய உறவின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் ஒன்பது பேரை கொலை செய்த கொடூர கொலையாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தின் கோரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் அதிகளவில் பணியாற்றி வந்தனர்.
அவர்களில் ஒருவர்தான் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மசூத். கரிமாபாத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால், வாடகை கொடுக்க வழியின்றி அதன் உரிமையாளருக்கு சொந்தமான குடோனில் குடியேறியுள்ளார். குடோனில் வசித்து வந்த மசூத், குடும்பத்துடன் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் சந்தோஷ் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் மசூதின் குடும்பத்தினரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!
கிணற்றில் மிதந்த உடல்கள்...
இச்சூழலில், மே 21ஆம் தேதி மாலை நேரத்தில், தொழிற்சாலை அருகே உள்ள கிணற்றில் சில சடலங்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அங்கு சென்ற காவல் துறையினர், தண்ணீரில் மிதந்த 4 சடலங்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்த மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா, அவரது மூன்று வயது மகன் என்பது தெரியவந்தது.
இந்த திடுக்கிடும் நிகழ்வின் மறுநாள், அதே கிணற்றில் மேலும் 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மசூத் மகன் சபாக், பிகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல், அகமது ஆகியோரின் உடல்களையும் அதே கிணற்றில் இருந்நு காவல் துறையினர் கைப்பற்றினர். ஒரே கிணற்றில் இருந்து அடுத்தடுத்து 9 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவறான தகவலின்பேரில் சோதனை: காவலர்களைத் திட்டி ஆடியோ வெளியீடு!