தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிறந்த நாளன்று சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை! - hyderabad girl raped

ஹைதராபாத்: ஹனம்கொண்டாவில் தன் பிறந்தநாளைக் கொண்டாட, ஆண் நண்பரை நம்பி சென்ற, 19 வயது இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது
accused

By

Published : Nov 29, 2019, 12:31 PM IST

தெலங்கானா மாநிலம், வாராங்கல் நகரத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த புதன்கிழமையன்று (நவ.27) தன் பிறந்த நாளை முன்னிட்டு, வீட்டில் கோயிலுக்குச் செல்வதாகக் கூறி, தன் ஆண் நண்பரைச் சந்திக்க சென்றுள்ளார்.

வெகு நேரம் கடந்தும் இளம்பெண் வீட்டிற்கு வராத காரணத்தால், அவர் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்டையில் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்களுக்கு இரவு பத்து மணியளவில் ஹனம்கொண்டா பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது. அதனை உடற்கூறு ஆய்விற்காக காவல் துறையினர் கைப்பற்றி, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் நடத்திய விசாரணையில் அந்த சடலம் காணாமல் போன சிறுமியுடையது என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து காவல் துறையினர் இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தீனதயாள் நகரைச் சேர்ந்த புலி சாய் கௌடா என்று தெரிய வந்தது.

மேலும் இளம்பெண் படிக்கும் பள்ளியில் இடைநிலை படிப்பு படித்து வந்துள்ளார். பள்ளியின் அருகில் அச்சிறுமியின் தந்தை காய்கறிக் கடை நடத்தி வந்தபோது சாய் கௌடாவுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கும் ஏற்பட்டுள்ளது.

சிறுமியைக் கொலை செய்த நபர் கைதான காட்சி

அதைத் தொடர்ந்து சிறுமியன் பிறந்தநாளன்று அவரைத் தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்ததாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.

சாய் கௌடாவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியன் குடும்பத்தினர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பெண் டாக்டர் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை - முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்! #RIPPriyankaReddy

ABOUT THE AUTHOR

...view details