இந்தியா- சீனா ராணுவத்தினர் இடையே கிழக்கு லடாக்கில் நடந்த வன்முறையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தனது கவலையை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பதற்றங்களைத் தடுக்க ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். போர் நிரந்தர தீர்வு அல்ல; இது தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களின் நிலைமையை மோசமாக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “ஆசிய பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகை வாழும் இரண்டு நாடுகளுக்கு இடையே பிரச்னையை கையாளுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இரு நாடுகளும் வீழ்ச்சியின் விளைவை அறிந்திருக்கின்றன என்று நம்புகிறேன்.