சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்தவர்களுடன் ஒரு கலந்துரையாடல்! அமர்வு 2 - சிவில் சர்வீஸ் தேர்வுகள்
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடையும் ரகசியங்களை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ஒரு உயர் அரசு அலுவலராக நாட்டிற்கு சேவை செய்வதுதான் உங்கள் கனவா? இதோ உங்களுக்காக... சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்தவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!
சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதில் வெல்வது எப்படி என்பது குறித்து அத்தேர்வில் வெற்றிபெற்றவர்கள் கூறும் ஆலோசனைகள்! இந்த இணைய வழி கருத்தரங்கின் இரண்டாவது அமர்வில் ஐபிஎஸ் அலுவலர் ரீமா ராஜேஸ்வரியுடன் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற பிரதீபா வர்மா (3ஆம் இடம்), சஞ்சிதா மகாபத்ரா (10ஆவது இடம், சிமி கரண் (36ஆம் இடம்) ஆகியோர் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். தொடர்ந்து இணைந்திருங்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்துடன்...!