காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுக-வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
2ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வு வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை - 2ஜி வழக்கு
டெல்லி: 2ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
court
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், 2ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.