குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது '(மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்) ஜின்னா போன்று சதந்திரம் வேண்டும்' என்று போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதவிட்டுள்ள ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ், "ஜின்னா போன்று சுதந்திரம் வேண்டும் என நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் கேட்பது கிடைக்கும்" என காட்டமாகச் சாடியுள்ளார்.
இதனிடையே டெல்லி பாஜக செய்தித்தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பதவிட்டிருந்த அந்த வீடியோவின், உண்மைத் தன்மை குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
ஜனவரி 10ஆம் தேதி அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மதத்துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு அடைக்களம் தேடிவரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமைப் பெற உதவுகிறது. ஆனால், இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க : போர் பதற்றம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்