மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்யும் கனமழை காரணமாக மாநிலத்தில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பெண்கள், குழந்தைகள், பெரியோர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையினால் இடிந்த விழுந்த சுவர்! - wall collapsed
மும்பை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அந்தேரி பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பொதுமக்களுக்கு எவ்வித உயிர் சேதமும் இல்லை என்று மீட்புக்குழு கூறியுள்ளது.
மும்பை
இந்நிலையில், மும்பை அந்தேரியில் மலாப்பா டோங்ரி என்னும் தொழிற்சாலைக்கு அருகே கனமழையின் காரணத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழை பெய்து வருவதால் சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. மழை அதிகம் பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர இயலாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.