கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி 14 மாதங்களாக ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று அந்த கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆளும் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.
மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறேன் - எடியூரப்பா - பாஜக
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பதற்காக அக்கட்சியின் தலைமையின் உத்தரவை தான் எதிர்பார்த்திருப்பதாக, அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
![மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறேன் - எடியூரப்பா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3935759-525-3935759-1563979683482.jpg)
Waiting for instructions from Delhi: BS Yeddyurappa
இதனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு கவிழ்ந்து. மேலும், முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனிடையே கர்நாடகாவில் ஆட்சியமைக்க தகுதியான கட்சியாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தலைமையின் உத்தரவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் என்றும், மேலிட உத்தரவு வந்தவுடன் ஆளுநரிடம் சென்று ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் எனவும் தெரிவித்தார்.