பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, "கர்நாடக அமைச்சரவையை சட்டப்பேரவை கூட்டுத் தொடருக்கு முன்பே விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுடன் ஆலோசிக்க டெல்லி செல்கிறேன். என்னுடைய விருப்பத்திற்கு உயர்மட்ட குழுவின் அனுமதி கிடைத்தால், அதற்கான பணிகளை விரைந்து முடிப்பேன்.
உயர்மட்ட குழு அனுமதிக்காக காத்திருக்கிறேன்- எடியூரப்பா - Karnataka chief Minister B.S.Yedyurappa
பெங்களூரு: அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உயர்மட்ட குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
![உயர்மட்ட குழு அனுமதிக்காக காத்திருக்கிறேன்- எடியூரப்பா Waiting for High Command's Green Signal for Cabinet expansion: CM BSY](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8836493-900-8836493-1600347282665.jpg)
Waiting for High Command's Green Signal for Cabinet expansion: CM BSY
முக்கியமாக, பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களிடம் கர்நாடக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வெள்ள நிவாரண நிதி கோரவுள்ளேன். கரோனா வைரஸ் பாதிப்பால் கர்நாடக அரசு பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், மாநில அரசு கல்யாண கர்நாடக திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கவுள்ளது" என்றார்.