தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயங்கரவாதிகள் குறித்த இம்ரான் கானின் கருத்து: துணை குடியரசுத் தலைவர் கண்டனம்! - Vice President M Venkaiah Naidu

டெல்லி:  பாகிஸ்தான் மண்ணில் இன்னும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் இருப்பதாகக் கூறிய பிரதமர் இம்ரான் கானின் கருத்திற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

VP Naidu

By

Published : Jul 26, 2019, 4:02 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை வாஷிங்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தங்கள் நாட்டில் 30,000 - 40,000 வரை பயங்கரவாதிகள்வரை இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

இது குறித்து அவர் பேசுகையில், 'பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை எங்களது அண்டை நாடுகளுடன் சேர்த்து சில நாடுகளில் கொள்கையாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுதல், நிதியளித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன. அண்டை நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தங்கள் நாட்டில் 30,000 முதல் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர் என்று கூறியது வரவேற்பு அளிக்கத்தக்கது. ஆனால், அவர்களுக்கு காஷ்மீரில் பயிற்சி அளிப்பதாக கூறியது தவறானதாகும்' என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 'அவர்களுக்கு உங்கள் நாட்டில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய நாடும் பாதிக்கப்பட நேரிடும். எனவே, அதைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுங்கள்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details