தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்க்கண்ட் இறுதிகட்ட தேர்தல்: விறு விறு வாக்குப்பதிவு! - ஜார்க்கண்ட் இறுதிகட்ட வாக்குப்பதிவு

ராஞ்சி: இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்தாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலில் 2 மணி நிலவரப்படி 50 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

Jharkhand assembly polls  polls  elections  ஜார்க்கண்ட் இறுதிகட்ட தேர்தல்  ஜார்க்கண்ட் இறுதிகட்ட வாக்குப்பதிவு  Jharkhand poll percentage
ஜார்க்கண்ட் இறுதிகட்ட தேர்தல்: விறு விறு வாக்குப்பதிவு

By

Published : Dec 20, 2019, 2:29 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியது.

இதில், மொத்தம் 29 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 16 தொகுதிகளில் முக்கிய வேட்பாளர்களாக ஜார்கண்ட் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற ராஜ் பலிவார், லுயிஸ் மராண்டி மற்றும் ரந்தர் சிங் ஆகியோர் உள்ளனர்.

மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.ஜே.டி ஹேமந்த் சோரன், பார்ஹெட் தொகுதியில் போட்டியிடுகிறார். காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 50 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜாமியாவின் இணையதளம் ஹேக் - 'மாணவர்களே வலுவாக எழுந்திருங்கள்!'

ABOUT THE AUTHOR

...view details