இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 81 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இதனிடையே, தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்கள் முகமூடிகளை பயன்படுத்திவருகின்றனர். இதனால், அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது. கேரள லத்தீன் கத்தோலிக்க சங்கத்தின் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு பல காலமாக செய்துவருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் உழைத்து தங்களின் தையல் இயந்திரங்களை பயன்படுத்தி 500 முகமூடிகளை தன்னார்வலர்கள் தயார் செய்துவருகின்றனர். பின்னர், அதனை மாநில சுகாதாரத் துறைக்கு விலையின்றி வழங்குகிறார்கள். இதுகுறித்து கேரள லத்தீன் கத்தோலிக்க சங்கத்தின் கள்ளூர் செயலாளர் பிஜு வல்லிபாரம்பில்வ கூறுகையில், "தேவைக்கேற்ப முகமூடிகளை தயார் செய்வது பிரச்னையாக உள்ளது.