மிசோரம் மாநிலத்தில் உள்ள துய்கும் பகுதியின் கைப்பந்து அணி வீராங்கனை லால்வென்ட்லுவாங்கி. இவர் நேற்று மிசோரத்தில் நடைபெற்ற 2019 மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அவர் தன்னுடன் தனது ஏழு மாத குழந்தையையும் போட்டிக்கு அழைத்துவந்தார்.
அதன்பின், போட்டியின் இடையில் அழுதுகொண்டிருந்த தனது குழந்தைக்கு தாய் பாலுட்டினார். இதைப்பார்த்த மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.