தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2020, 11:12 AM IST

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: விளைவுகள் என்னென்ன?

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஸ்டைரீன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எளிதில் ஆவியாகக்கூடிய இந்த வாயுவை, தொடர்ந்து மனிதர்கள் சுவாசித்தால் பெரும் ஆபத்துகள் ஏற்படும்.

Vizag Tragedy
Vizag Tragedy

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஸ்டைரீன் வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

இந்த ஸ்டைரீன் வாயுக் கசிவு காரணமாக அப்பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்குக் கண், தோல், மூக்கு ஆகியவற்றில் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.

ஸ்டைரீன் வாயு எதற்குப் பயன்படுகிறது?

ஸ்டைரீன் என்பது எவ்வித நிறமுமற்ற ஒரு எரியக்கூடிய திரவம். இந்த வாயு எளிதில் ஆவியாகக்கூடியது. இவை பாலிஸ்டிரீன் பிளாஸ்டிக், பிசின்கள், கண்ணாடி, ரப்பர், லேடெக்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்டைரீனைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருள்கள்

  • பேக்கேஜிங் பொருள்கள்
  • வயரிங் உள்ளிட்ட இன்சுலேஷன் பணிகளுக்கு
  • ஃபைபர் கிளாஸ், பிளாஸ்டிக் குழாய்கள், ஆட்டோமொபைல் பாகங்கள்
  • கோப்பைகள் உள்ளிட்ட வீட்டுப் பொருட்கள்
  • கார்பெட் பொருள்கள்

ஸ்டைரீன் வாயுவால் ஏற்படும் விளைவுகள்

  • மனிதர்கள் ஸ்டைரீன் வாயுவைத் தொடர்ந்து சுவாசித்தால் கடும் மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் நெஞ்சு, கண் எரிச்சல்களுடன் இரைப்பை பகுதிகளில் பிரச்னை ஏற்படும்.
  • ஸ்டைரீன் வாயுவை நீண்ட நேரம் சுவாசித்தால் மத்திய நரம்பு மண்டலத்தில் பிரச்னை உருவாகும்.
  • தலைவலி, உடற்சோர்வு, மனச்சோர்வு, மத்திய நரம்பு மண்டல செயலிழப்பு ஏற்படும்.
  • செவித்திறன் குறைவடையும், சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்.

ABOUT THE AUTHOR

...view details