ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர். ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் மே மாதம் 7ஆம் தேதி பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியது.
உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.