ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கிராமத்தில் இயங்கிவரும் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ரசாயன தொழிற்சாலை தென் கொரியா எல்ஜி நிறுவனத்துக்கு சொந்தமானது.
விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது? - விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?
விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை தென் கொரியா எல்ஜி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
பாலி ஸ்டைரீன் என்ற பிளாஸ்டிக் வகையை உற்பத்தி செய்வதற்காக 1961ஆம் ஆண்டு இந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு, யுபி குழுமத்தின் மேக்டொல் நிறுவனத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டது. இந்தியாவை பெரிய சந்தையாகக் கருதி வளர விரும்பிய தென் கொரியாவின் எல்ஜி நிறுவனம், இந்துஸ்தான் பாலிமர்ஸ் நிறுவனத்தை 1997ஆம் ஆண்டு வாங்கியது. இந்தியாவில் பாலி ஸ்டைரீனை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களில் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.
இதையும் படிங்க: 'விஷவாயு விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' - ராகுல் காந்தி