தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு
விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு

By

Published : May 8, 2020, 10:06 AM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து நேற்று ஏற்பட்டது.

இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியது. உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன் பலர் மயக்கமடைந்துள்ளனர்.

இதில், சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. விஷவாயுவை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில், முதன்மைச் செயலாளருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details