கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் சென்ட்ரெல் ஜெயிலில் ’ஃப்ரீடம் புட் பேக்டரி’ (Freedom Food Factory) என்ற பெயரில் சிறையில் உள்ள கைதிகள் உணவு தயாரித்து சிறையிலிருந்து விற்பனை செய்து வந்தனர். தற்போது ’ஃப்ரீடம் புட் பேக்டரி’ அடுத்த கட்டமாக பிரபல உணவு விற்கும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் உணவு விற்பனையிலும் தனது தடத்தைப் பதிக்கவுள்ளது.
ஸ்விக்கியில் கைதிகள் உணவு விற்பனை: கேரளா அதிரடி
கேரளா: சிறைக் கைதிகள் தயாரிக்கும் சாப்பாடு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து சிறை நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஃப்ரீடம் புட் பேக்டரி மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் இதுவரை சிறைக்கு வெளியே விற்பனை செய்யப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் உணவு விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதில், சுவையான 300 கிலோ பிரியாணி, வறுத்த கோழி ஒன்று, 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், ஊறுகாய், ஒரு பாட்டில் தண்ணீர் உள்ளிட்டவை காம்போ பேக்காக ரூ 127க்கும், தண்ணீர் பாட்டில் இல்லாத காம்போ பேக் ரூ 117க்கும் விற்பனை செய்யப்படும்’ என்றார்.