தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

9 லட்சம் முகக்கவசங்களை வழங்கிய விவோ!

டெல்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒன்பது லட்சம் முகக்கவசங்களை வழங்கியுள்ளது.

Vivo
Vivo

By

Published : Apr 18, 2020, 11:03 AM IST

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலரும் மிகத் தீவிரமாகப் போராடிவருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஒன்பது லட்சம் முகக்கவசங்களை பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ அளித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் Brand Strategy பிரிவின் இயக்குநர் நிபூன் மரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல் துறையினர், டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் சுமார் 9 லட்சம் முகக்கவசங்களை விவோ இந்தியா வழங்கியுள்ளது. கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்த நாட்டிற்குச் செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஐந்தாயிரம் N-95 ரக முகக்கவசங்களை விவோ நிறுவனம் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், கோவிட்-19 பரவலைக் கருத்தில்கொண்டு விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வெளியீடுகள் அனைத்தையும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க: ’வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது’

ABOUT THE AUTHOR

...view details