மக்களவைத் தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகிய நிலையில் அது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் இணையதளத்தில் வரத் தொடங்கியது. அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து வெளிவந்த மூன்று படங்கள் அடங்கிய மீம்ஸ் வெளியானது.
ஐஸ்வர்யா மீம்ஸ் பதிவு; மன்னிப்பு கேட்டார் விவேக் ஓபராய்! - ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா குறித்து விவேக் ஓபராய் தனது ட்விட்டரில் போட்ட பதிவுக்கு பெண்களிடையே எதிர்ப்பு எழுந்ததால், அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், முதல் படத்தில் நடிகர் சல்மான் கான், ஐய்வர்யா ராய் இணைந்திருந்தனர், அது தேர்தலின் முந்தைய கருத்து கணிப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவதில் நடிகர் விவேக் ஓபராயுடன் ஐய்வர்யாராய் இருந்தார். அதில் தேர்தலின் பிந்தைய கருத்து கணிப்பு என்று கூறப்பட்டிருந்தது. பின் மூன்றவது படத்தில் ஐஸ்வர்யா ராய் அவர் கணவர் அபிஷேக் பச்சன் அவர்களின் மகளும் உடன் இருந்தார். இதுதான் தேர்தல் முடிவு என்று அதில் இருந்தது.
இந்த மீம்ஸை நடிகரும் தொழில் அதிபருமான விவேக் ஓபராய், தனது ட்விட்டரில், "இதில் அரசியல் இல்லை. நிஜ வாழ்க்கை" என்று எழுதி அதை பகிர்ந்திருந்தார். இது நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்கை குறித்து இழிவாக எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், பின் அதற்கு தேசிய மகளிர் ஆணையம் உள்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு அலைகள் எழுந்ததால், விவேக் ஓபராய் இன்று அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.