இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதற்கு முக்கிய காரணம் விமான பயணம். விமானங்கள் மூலமே இந்த வைரஸ் தொற்று ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிவருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கோவா வந்தவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதை கோவா அரசும் உறுதி செய்தது. அந்த நபர் மார்ச் 22ஆம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு விஸ்தாரா விமானம் மூலம் சென்றுள்ளார்.
கோவா அரசு அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து விஸ்தாரா நிறுவனம் தனது விமான பணியாளர்கள் கட்டாயம் 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.