தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வாரணாசி செல்வது புத்த மதத்தவருக்கு பிரதான ஒன்று' - இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச - வாரணாசி செல்வது புத்த மதத்தவருக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது

டெல்லி: வாரணாசி பயணம் புத்த மதத்தவருக்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Rajapaksa
Rajapaksa

By

Published : Feb 10, 2020, 11:12 PM IST

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக, இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை பிப்ரவரி 8ஆம் தேதி சந்தித்துப் பேசினார். இதையடுத்து, நேற்று வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு, அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற அவர், பூஜையில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், சார்நாத் புத்த கோயிலுக்குச் சென்ற அவரிடம், வாரணாசியில் உங்களுக்குப் பிடித்தது என்ன? என நமது ஈடிவி பாரத் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், வாரணாசி செல்வது புத்த மதத்தவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது என பதிலளித்தார்.

பிகாரில் உள்ள புத்த கயாவிற்கு பிப்ரவரி 10ஆம் தேதி, சென்று மகாபோதி கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார். பின்னர், அவர் திருப்பதிக்குச் செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இதையும் படிங்க: சத்தீஷ்கரில் நக்ஸலைட் சுட்டுக்கொலை - இரண்டு வீரர்கள் வீரமரணம்

ABOUT THE AUTHOR

...view details