தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இயற்கை எழில்மிக்க பத்ரா காட்டுயிர் சரணாலயம்!

இயற்கை எழில் கொஞ்சும் வன உயிரிகளின் வாழ்விடமான பத்ரா காட்டுயிர் சரணாலயம் பார்ப்போரின் கண்களை மட்டுமல்ல, மனதையும் கொள்ளைகொள்ளும் அழகுமிக்கது.

Bhadra sanctury

By

Published : Aug 7, 2019, 5:12 PM IST

தற்போதைய சூழலில் மனிதர்கள் இயற்கையை மறந்து இயந்திர வாழ்க்கையில் நுழைந்து இயந்திரத்தைவிட அதிவேகமாக சுழன்று கொண்டிருக்கின்றனர். தன்னைப் பெற்றவர்களையும், தன்னுடைய பிள்ளைகளையும் பார்க்கக் கூட நேரமில்லாமல் ஓடுகிறார்கள். இப்படி இயந்திர வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், வருடத்தின் ஒருநாளாவது மனதிற்கு அமைதியைக் கொடுக்க வேண்டும்.

அதற்கு இயற்கைச் சூழல் மிகுந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படிப்பட்ட இடங்களுக்கு செல்கையில் நம் மனம் நம்மையும் அறியாமல் ஒருவித புத்துணர்ச்சியை அடையும். நம் வாழ்வில் எதைத் தேடி அலைய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும். அப்படி இயற்கை எழில்மிகு கொஞ்சம் இடங்கள் நம் நாட்டில் எண்ணற்றவை உள்ளன.

அதில் ஒன்றுதான் கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் என்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு கண்ணைக் கவரும் வகையில் பல இடங்கள் அமைந்துள்ளன. மலைகள், ஆறுகள், அருவிகள் கோயில்கள் போன்றவை இங்கு அதிகளவில் உள்ளன. சிக்மகளூர் சுற்றுலாப் பயணிகளின் ஒரு சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும்.

மாநிலத்தின் மையப் பகுதியில் புகழ்பெற்ற பத்ரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. நம் எல்லோருக்கும் ஒருவேளை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இங்குள்ள இயற்கை அழகையும், அரியவகை உயிரினங்களையும் காணத் தவறக் கூடாது. ஏனென்றால், இந்த இயற்கை அழகை ரசிக்கவும், அருவிகளின் அழகைக் காணவும் நமக்கு இரு கண்கள் போதாது என்றே சொல்ல வேண்டும்.

அப்படி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகத்தான் இந்த பத்ரா சரணாலயம் உள்ளது. இங்குள்ள பலவகைப் பறவைகளையும், அருவிகளையும், வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் காண அவ்வளவு அழகாக இருக்கும்.

பத்ரா காட்டுயிர் சரணாலயம்

மைசூர் அரசின்போது 1951ஆம் ஆண்டு, இந்த இடம் ஜகாரா பள்ளதாக்கு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள பள்ளத்தாக்குகள், பலவகையாக மரங்கள், விலங்குகள் இந்த காட்டிற்கு கூடுதல் அழகு சேர்ப்பவையாக அமைந்துள்ளது.

இங்கு கிட்டத்தட்ட 120 வெவ்வேறு வகையான மரங்களும் செடிகளும் உள்ளன. மேலும், இந்தக் காட்டில் தேக்கு, மூங்கில் உள்ளிட்ட பலவகை அரிய மரங்களும் உள்ளன.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கரடி, சிறுத்தை, முதலை, யானைகள், பாம்புகள், அணில்கள் உள்ளிட்ட பலவகை வன உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இங்குள்ள பறவைகளின் சத்தம் கேட்போரை மெய்மறக்கச் செய்கிறது.

ABOUT THE AUTHOR

...view details