எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு, ரமேஷ் குமார் தன்னுடைய சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய சபாநாயகராக யார் தேர்ந்தெடுக்கபடுவார் எனக் கேள்வி எழுந்தது. எடியூரப்பாவுக்கு நெருக்கமாக இருக்கக் கூடியவர்தான் புதிய சபாநாயகராக வருவார் எனவும் கூறப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஸ்வேஷ்வர் ஹெக்டே
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எடியூரப்பாவுக்கு மட்டுமல்லாமல் பாஜக மேலிடத்திற்கும் நெருக்கமானவர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.