ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இயங்கிவரும் எல்.ஜி. நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேர்ந்த விபத்தில் அப்பாவி மக்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆந்திர கேஸ் விபத்து குறித்து அவதூறு: கைதுக்கு உத்தரவிட்ட சிஐடி - கைதுக்கு உத்தரவிட்ட சிஐடி
ஹைதராபாத்: ஆந்திர கேஸ் தொழிற்சாலையில் நேர்ந்த விபத்து குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நபர் ஒருவரைக் கைது செய்ய ஆந்திர சிஐடி உத்தரவிட்டுள்ளது.
vishakapattinam
இந்நிலையில், இந்த விபத்து குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும், இதனை வைத்து பிரபலம் அடைய முயற்சித்ததாகவும் கூறி மல்லாடி ரகுநாத் என்ற நபரைக் கைது செய்ய ஆந்திர மாநில சிஐடி உத்தரவிட்டுள்ளது.