இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் விபத்து; 10 பேர் உயிரிழப்பு - இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் விபத்து
13:18 August 01
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இன்று கிரேன் சாய்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
முதல்கட்ட தகவல்களின்படி, இன்னும் சிலர் கிரேனுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்தவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் சம்பவயிடத்திற்கு டிசிபி சுரேஷ் பாபு விரைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.