ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 13 காவல் நிலையங்களில் 455 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் போதைப்பொருள் அதிகமான நிலையில், அவற்றை அகற்ற காவல் துறையினர் முடிவு செய்தனர்.
10 ஆண்டுகளாக சேமித்துவைத்த போதைப்பொருள்கள் அழிப்பு! - ஆந்திர மாநிலம்
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 10 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை காவல் துறையினர் போதைப்பொருள் அகற்றும் குழு முன்னிலையில் அழித்தனர்.
போதை பொருள் அழிப்பு
இதையடுத்து, போதைப்பொருள் அகற்றும் குழு முன்னிலையில் கபுலுப்பாடா என்னும் குப்பைக் கிடங்கில், போதைப்பொருள்களை காவல் துறையினர் அழித்தனர். இதில், பல்வேறு கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 கோடி மதிப்புள்ள 63 ஆயிரத்து 879 கிலோ போதைப்பொருள்களை காவல் துறையினர் தீவைத்து அழித்தனர்.