தமிழ்நாடு

tamil nadu

மாற்றத்தை ஏற்படுத்திய சமூக வலைதளம்: வயது முதிர்ந்த தம்பதியின் துயரை துடைத்த மக்கள்

டெல்லி: உணவகத்தை நடத்திவந்த வயது முதிர்ந்த தம்பதிகள் கரோனா பெருந்தொற்றால் இன்னலுக்குள்ளான நிலையில், அவர்கள் குறித்த ஒரு சமூக வலைதள பதிவால் தம்பதியருக்கு உதவ மக்கள் முன்வந்துள்ளார்கள்.

By

Published : Oct 9, 2020, 11:26 AM IST

Published : Oct 9, 2020, 11:26 AM IST

BabaKaDhaba
BabaKaDhaba

தெற்கு டெல்லியில் காந்தா பிரசாத் (80) என்பவர் மனைவி பதாமியின் உதவியோடு பிரசாத் என்ற உணவகத்தை நடத்திவருகிறார். இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த போதிலும் தாய், தந்தையருக்கு உதவு அவர்கள் முன்வரவில்லை. இருப்பினும், உணவகத்தை நடத்தி அன்றைய தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்துவந்தனர். இதற்கிடையே, அவர்களுக்கு கரோனா பெருந்தொற்று அவர்கள் வாழ்வில் பேரிடியாய் விழுந்தது.

இதனால் பெரும் இன்னலுக்குள்ளான முதியவர்கள் குறித்து ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். காலை 6:30 மணிக்கு பணியை தொடங்குவதாகவும் 9:30 மணிக்கு உணவை தயார் செய்துவிடுவோம் எனவும் முதியோர்கள் அந்த வீடியோவில் தெரிவித்தனர்.

எவ்வளவு வருவாய் ஈட்டுவீர்கள் என கேள்வி எழுப்பியபோது, சில பத்து ரூபாய் நோட்டை எடுத்து காட்டினார். பல மணி நேர கடின உழைப்புக்கு குறைந்தபட்ச வருவாயே கிடைக்கிறது என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக, முதியவர்களுக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர். நடிகை சோனம் கபூர், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் முதியோர் குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த காந்தா பிரசாத், "உணவகத்தில் வாடிக்கையாளர்கள் குவிவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

கரோனா காலத்தில் வாழ்வதே கடினமாக இருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் குவிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளக்கிறது என பதாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க:உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி

ABOUT THE AUTHOR

...view details