தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரிக்கரின் மகன்கள் பாஜகவில் இணைய வேண்டும்: வினய் டெண்டுல்கா் கோரிக்கை - பாரிக்கர் மகன்கள்

பனாஜி: மறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

பாாிக்கர் மகன்கள்

By

Published : Mar 25, 2019, 11:55 PM IST

கணைய புற்றுநோய் காரணமாக கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமோத் சவாந்த், கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் மறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன்கள் உட்பால் மற்றும் அபிஜித் ஆகியோர் பாஜக கட்சியில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கா் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பாரிக்கரின் மறைவிற்கு பின்னர் அவரது மகன்கள் இருவரையும் சந்தித்து கட்சியில் இணைய வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய துணைத்தலைவர் அவினேஷ் ராய் கண்ணா தெரிவித்ததாக டெண்டுல்கா் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details