ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கையெறி குண்டுகளை வீசி தாக்குவதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் பயிர் நிலங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாக். வீரர்கள் அத்துமீறல்; எல்லையில் உள்ள கிராம மக்கள் அச்சம்! - கையெறி குண்டுகளை வீசிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்
ஸ்ரீநகர்: எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதேசமயம் வெடிக்காமல் பூமியில் புதைந்து கிடக்கும் பல்வேறு கையெறி குண்டுகளால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த தாக்குதல்களால் தங்களது உயிருக்கே ஆபத்து என அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சிலிகோட், திலவாரி, சுரந்தா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின், யூரி செக்டாரில் உள்ள நவ்வா கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல கையெறி குண்டுகளை இந்திய ராணுவ வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் செயலிழக்க செய்தனர்.