தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பறவையை பிடித்த கிராமவாசிகள்! - ஜிபிஎஸ் பறவை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தையடுத்த பர்வபாட்டி கிராமத்தில் பொதுமக்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பறவை ஒன்றை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

villagers-catche-gps-attached-bird-probe-on
villagers-catche-gpvillagers-catche-gps-attached-bird-probe-ons-attached-bird-probe-on

By

Published : Apr 24, 2020, 3:27 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தையடுத்த பர்வாபட்டி கிராமத்தில், சி3 என்ற டேக்குடன் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பறவை ஒன்று தென்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவியுடன் பறவையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இந்த பறவையைப் பிடித்த பொதுமக்கள், வனத்துறை அலுவலர்களிடம் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், அந்த பறவையை கொண்டுச் சென்று சரக்தியாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தின் கண்காணிப்பில் வைத்தனர். இதைத்தொடர்ந்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் பறவையின் உடம்பில் எதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:ஆண்ட்ராய்டு கேமர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது ஃபோர்ட்நைட்

ABOUT THE AUTHOR

...view details