கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி மக்களின் குறைகளை கேட்டறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும் கிராம பயணத்தை மேற்கொண்டு நேற்று யாத்கிரிக்குச் சென்றார். அங்குள்ள கிராமவாசிகள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரிடமும் கலந்துரையாடினார்.
பள்ளியில் படுத்துறங்கிய முதலமைச்சர்! - முதலமைச்சர்
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கிராம பயணத்திற்கு சென்றபோது அரசுப் பள்ளியில் படுத்துறங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
kumarasamy
செய்தியாளர் சந்திப்பின்போது நட்சத்திர விடுதிக்கு செல்வீர்களா என எழுப்பிய கேள்விக்கு, சாலையில் தூங்க தான் தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். பிறகு அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் தரையிலேயே போர்வையை விரித்து உறங்கியுள்ளார். குமாரசாமி அங்கிருந்து காலபூரகிச் செல்லும்போது மழை குறுக்கிட்டதால் அவரின் பயணத்தில் தடை ஏற்பட்டது.