தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் முதல் முதலாக மின்சார வசதி பெற்ற கிராமம் - கணூரி-தந்தா கிராமம்

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்று முதல் முதலாக மின்சார வசதி கிடைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

J&K village  gets electricity for the first time
J&K village gets electricity for the first time

By

Published : Jan 18, 2021, 4:36 PM IST

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மலைத்தொடரில் அமைந்துள்ளது தோடா மாவட்டம். அங்குள்ள கணூரி-தந்தா கிராமத்தில் மின்சார வசதி என்பது எட்டா கனியாக உள்ளது என அப்பகுதி மக்கள் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் வருத்தம் தெரிவித்தனர்.

இதையடுத்து, துணைநிலை ஆளுநர் கிராமத்திற்கு மின்சார வசதி கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். ஒரு மாதத்திற்குள் இந்தப் பணிகள் அனைத்தும் முடிக்கப்டும் என உறுதிபட தெரிவித்த அவர், தோடா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தற்போது மின்சார வசதி கிடைக்க செய்துள்ளார்.

ஒரு மாத கால அவகாசத்திற்குள் மின்சார வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, 15 நாட்களுக்குள்ளாகவே, பணிகளை விரைந்து முடித்து மாவட்ட நிர்வாகம் மின்சார வசதியினை மக்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு துணைநிலை ஆளுநர் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள், இது ஒரு வரலாற்று தருணம். மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எங்களது கிராமத்திற்கு வருகை தந்து, எங்களது கவலைகளை அறிந்து மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தார். அவர்களுக்கு எங்களது நன்றிகள் என்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு, குறிப்பாக தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்க துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தினr வழங்க ஆவன செய்யவேண்டும் எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details