தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரணடையவில்லையென்றால் குடும்பத்துடன் கொல்லப்படுவாய்- மகனை எச்சரித்த விகாஸ் துபேவின் தாய் - விகாஸ் துபே சகோதரர் தலைமறைவு

லக்னோ: காவலர்களால் தேடப்பட்டுவரும் விகாஸ் துபேவின் சகோதரரை காவலர்களிடம் சரணடையுமாறு அவரது தாய் எச்சரித்துள்ளார்.

vikas-dubeys-mother-appeals-younger-son-to-surrender-or-meet-same-fate
vikas-dubeys-mother-appeals-younger-son-to-surrender-or-meet-same-fate

By

Published : Jul 22, 2020, 4:11 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் தன்னை கைது செய்ய வந்த எட்டு காவலர்களை சுட்டுக் கொன்றதையடுத்து, ரவுடி விகாஸ் துபே சில நாள்களுக்கு முன்பு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, துபேவிற்கு துணையாக இருந்ததாக அறியப்படும், அவரது சகோதரரான தீப் பிரகாஷ் துபேவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தனது சகோதரரின் இறப்பிற்கு பிறகு தலைமறைவாகியுள்ள தீப் பிரகாஷ் உடனடியாக காவல் துறையினரிடம் சரணடையவேண்டும் எனவும் இல்லையென்றால், காவல் துறையினர் தங்களது குடும்பத்தினரை கொன்றுவிடுவார்கள் என அவரது தாய் சரளா தேவி கூறியுள்ளார்.

காவலர்கள் விகாஸ் துபே குறித்து சில கேள்விகளை கேட்பார்கள். அதற்கு பதில் தெரிந்தால் கூறுங்கள். தவறு செய்யவில்லை எனும் சமயத்தில் ஏன் தலைமறைவாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் தன்னிடமாவது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுமாறு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக தீப் பிரகாஷ் துபே குறித்து தகவலளிப்பவர்களுக்கு லக்னோ காவல் துறை சார்பில் 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details