மும்பையிலிருந்து வரும் நிழல் உலக தாதாக்களின் கதைகளை கேட்டு சளித்து போன மக்களை, கான்பூர் என்கவுன்ட்டர் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த சில நாள்களாக பிரைம் டைம் ஷோவின் மையமாக இருந்த இவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து என்கவுன்ட்டர் செய்துள்ளனர். ஜூலை 3ஆம் தேதி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவலர்களை இவரின் ஆட்கள் சுட்டுக்கொலை செய்தனர். கடந்த ஒரு வாரமாக இவரை பிடிக்க காவல் துறையினர் பல முயற்சிகள் செய்த நிலையில், இன்று காலை அவர்களிடம் துபே பிடிபட்டதாகவும், ஆனால் தப்பி ஓட முயற்சித்த அவரை சுட்டுக் கொன்றதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அப்படி என்னதான் நடத்தது?
கான்பூர் என்கவுன்ட்டர்:
ஜூலை 2: கொலை முயற்சி வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய காவல் துறையினர் பிக்ரு கிராமத்திற்கு சென்றனர். அப்போது விகாஸ் துபேவின் ஆள்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட துபேவின் கூட்டாளிகள்
ஜூலை 3:கான்பூர் என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்று ஒரு சில மணி நேரங்களில், என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு தொடர்புடையதாகக் கூறி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே ஆகியோர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய காவலர்கள்
ஜூலை 4: கைது செய்ய காவல் துறையினர் வருவதாக துபேவுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காவல் நிலைய அலுவலர் வினய் திவாரி, காவல் ஆய்வாளர் கே.கே. சர்மா ஆகியோரிடம் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 10 காவலர்கள் சவுபேபூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஜூலை 5: துபேவின் கூட்டாளி தயா சங்கர் அக்னிகோத்ரி கைது செய்யப்பட்டார். என்கவுன்ட்டர் குறித்து முன்னதாகவே தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அதற்கு பின்னர்தான் தாக்குதல் நடத்த பிற கூட்டாளிகளை துபே அழைத்ததாகவும் சங்கர் விசாரணையில் தெரிவித்தார்.
தொடர் கைது நடவடிக்கை