உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் தூபே, கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, தூபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி, கூடுதல் காவல் துறை இயக்குநர் (ADG) ஹரிராம் சர்மா, காவல் துறை துணைத் தலைவர் (DIG) ரவீந்திர கவுர் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.