திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைகொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக சாட்சியங்களை சேகரிக்க என்ஐஏ குழுவானது இன்று கேரள மாநிலத்தின் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து முதல் கட்டப் பணிகளைத் தொடங்கியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேளர மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன், "தங்கக் கடத்தல் வழக்கில் தங்களது விசாரணையை முன்னெடுப்பதற்காக என்ஐஏ குழு செயலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து கேரள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.