பிரபல வரலாற்றாசிரியர் ராம்சந்திர குஹா, “குஜராத், பொருளாதார ரீதியாக முன்னேறியிருந்தாலும், கலாசார ரீதியாக பின்தங்கிய மாநிலமாகும். ஆனால், மேற்கு வங்க மாநிலம் பொருளாதார ரீதியாக பின்தங்கியதாக இருந்தாலும், கலாசார ரீதியாக முன்னேறியுள்ளது. இதனை எழுத்தாளர் பிலிப் ஸ்ப்ராட் 1939இல் பதிவு செய்துள்ளார்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, “ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்தி ஆட்சிசெய்ய முயன்றனர். தற்போது உயர் ரக குழு ஒன்று இதனைச் செய்கிறது. உங்களின் தந்திரங்களுக்குள் மக்கள் சிக்க மாட்டார்கள். குஜராத், வங்கம் இரண்டுமே சிறந்தவைதான். ஒன்றுபட்ட இந்தியாவின் கலாசார அடித்தளங்கள் வலுவானவை” என்று கூறியுள்ளார்.