குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமலாபூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கேதாவாலா தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பின் கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். மேலும், இனி அலுவல் நடவடிக்கையை காணொலி காட்சி மூலம் மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் முதலமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.