2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி விளையாடும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஓவல் மைதானத்தில் விஜய் மல்லையா! - england
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கேட் போட்டியை பார்ப்பதற்கு இன்று விஜய் மல்லையா இங்கிலாந்து ஓவல் மைதானம் வந்துள்ளார்.
இப்போட்டியை பார்க்க பிரபல தொழிலதிபரும், கடன் வாங்கி தப்பி ஓடிய குற்றவாளியுமான விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் உள்ளார். வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி லண்டனுக்கு தப்பி ஓடிய இவரை நாடு கடத்த இந்தியா முயற்சித்து வரும் நிலையில் அவர் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கான ஆட்டத்தை கண்டுகழித்து வருகிறார்.
ஓவல் மைதானம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்," நான் இங்கு கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்காக வந்துள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோக் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.