கரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் காரை மறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் - நாராயணசாமி
புதுச்சேரி: கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை அதிகரிக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முதலமைச்சர் நாராயணசாமி வந்த வாகனத்தை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென அருகிலுள்ள சட்டப்பேரவை வாயிற்பகுதியில் அமர்ந்து முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமியின் வாகனத்திற்கும் வழிவிடாமல் அவர்கள் மறித்தனர். உடனே, வாகனத்திலிருந்து கீழே இறங்கிய முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவைக்குள் வந்து முறையிடுமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிகழ்வால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: தாயகம் திரும்பிய நபர்கள், சுகாதாரத்துறையினர் இடையே வாக்குவாதம்