தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின சிறுமி: வீடியோ வெளியிட்டவர்கள் மீது புகார்! - ராஜஸ்தானில் தலித் துன்புறுத்தல் வழக்குகள்

ஜெய்பூர்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின சிறுமி, தான் வன்கொடுமை செய்யப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாக கூறி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

வீடியோ வெளியிட்டவர்கள் மீது புகார்
வீடியோ வெளியிட்டவர்கள் மீது புகார்

By

Published : Oct 24, 2020, 3:25 AM IST

ராஜஸ்தானில் உள்ள ஜலூர் என்ற மாவட்டத்தில் முன்று சிறுவர்கள் சேர்ந்து பட்டியலின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நான்கு மாதத்திற்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது, மேலும் அச்சிறுமியை கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி எதுவும் சொல்லாமல் நான்கு மாதங்கள் அமைதியாக இருந்துள்ளார். அவர்கள் தற்போது அந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளதால் அந்தச் சிறுமி காவல்துறையினரை நாடியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி, என்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அதனை வீடியோ எடுத்தனர். அதனை வைத்து என் நண்பர்களை அறிமுகப்படுத்துமாறு தொந்தரவு செய்தனர். நான் அவர்கள் சொன்னதை செய்யாததால் அந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். என்னை இந்த நிலைமைக்குள்ளாக்கியவர்கள் சாதி இந்துக்கள் என்பதால் எனது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

தற்போது காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜெய்ப்பூர் ஹோட்டலில் பெண் பாலியல் வன்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details