தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விதிகளை மீறியதாக இளைஞர் மீது காவல் துறையினர் தாக்குதல் - காசியாபாத் போக்குவரத்து காவல் துறை

லக்னோ: போக்குவரத்து விதிகளை மீறியதாக இளைஞர் ஒருவரைக் காவல் துறையினர் கண்மூடித்தனமாக சாலையிலேயே அடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

video-of-youth-beating-up-by-traffic-police-personnel-in-ghaziabad-goes-viral
video-of-youth-beating-up-by-traffic-police-personnel-in-ghaziabad-goes-viral

By

Published : Jun 26, 2020, 1:04 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இளைஞர் ஒருவரைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். அதற்கு அந்த இளைஞர் அபராதம் கட்ட மறுத்துள்ளார்.

விதிகளை மீறியதாக இளைஞர் மீது காவல் துறையினர் தாக்குதல்

இதனால் கோபமடைந்த காவல் துறையினர் அந்த இளைஞரை சாலையிலேயே தள்ளிவிட்டு அடித்துள்ளனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிதையடுத்து, ட்ரெண்டாகி வருகிறது. காவல் துறையினரின் அராஜக போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:மகாராஷ்ராவில் 868 கிலோ கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details