மும்பை போரிவாலி ரயில் நிலையம் அருகே உள்ள தெருவில் ஒருவர் சாலையோர இட்லி கடை நடத்திவருகிறார். இவர் தனது கடையில் சட்னி தயாரிப்பதற்காக அருகில் உள்ள ரயில் நிலைய கழிவறையில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி உள்ளார். இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். சுகாதாரமற்ற கழிவறையில் இருந்து அவர் தண்ணீர் எடுத்துச் செல்லும் இந்த வீடியோ காட்டுத் தீயைப் போல் மும்பை நகர் முழுவதும் பரவியது.
சட்னி செய்ய கழிவறையில் தண்ணீர் எடுத்த இட்லி வியாபாரி - idli vendor using toilet water goes viral
மும்பை: இட்லி கடை உரிமையாளர் ஒருவர் தன் கடையில் சட்னி தயாரிப்பதற்கு ரயில் நிலைய கழிவறையில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தும் காட்சிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

idly
கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி
மும்பை உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத் துறையின் பார்வைக்கு இது எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அவர்கள் சட்னி தயாரிக்க கழிவறையில் இருந்து தண்ணீரை பயன்படுத்திய அந்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.