மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விலங்குகளுக்கான சிகிச்சை மையத்துக்கு காயப்பட்ட குரங்கு குட்டி ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன் அழைத்து வரப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் ஹிங்னா என்னும் பகுதியில் நடந்த கல் எறிப்பு சம்பவத்தில் தாய் குரங்கும் அதன் குட்டியும் காயமடைந்தன. தாய் குரங்கும் குட்டியும் சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரப்பட்டன. உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் குட்டி குரங்கு சிகிச்சை மையத்திலேயே வைக்கப்பட்டது.
சிகிச்சை மையத்தில் விளையாடிய இளமானும், குட்டி குரங்கும் - நாக்பூரில் இளமான் குட்டி குரங்கு வீடியோ வைரல்
மகாராஷ்டிராவில் வன விலங்குகளுக்கான சிகிச்சை மையத்திற்கு கொண்டுவரப்பட்ட இளமான், குரங்கு குட்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Video of fawn and monkey goes viral in Nagpur treatment centre
சில நாட்களுக்கு முன்னர் நாக்பூரில் கைவிடப்பட்ட இளமான் ஒன்றும் சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரப்பட்டது. சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த இரு விலங்குகளுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவ்வப்போது இந்த இரு விலங்குகளும் மகிழ்ச்சியாக விளையாடுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.