இந்திய வனத்துறை அலுவலர் சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட யானையின் காணொலி தற்போது வைரலாகியுள்ளது.
அதில், சாலையில் நடந்து வரும் பெரிய யானை ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை வந்தடைகிறது. கேட் மூடப்பட்டுள்ளதால், யானை தனது தந்தத்தின் உதவியால் அதனைத் தூக்கியது. பிறகு சிறிது தலையைக் குனிந்து, கேட்டை தூக்கி வெற்றிகரமாகத் தாண்டியது. இருப்பினும் மீண்டும் திரும்பி வந்து, கேட் மூடப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துவிட்டு யானை நடந்து செல்லும். பின்னர் தடையாக இருந்த மற்றொரு கேட்டை, காலை உபயாகித்து யானை மிதித்துத் தாண்டி நடந்து செல்கிறது.